புதன், 8 பிப்ரவரி, 2012


தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!

திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.

ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.

7 மணி நேரம் பவர்கட்-பாழாய்டுமோ படிப்பு?: கவலையில் பிளஸ்டூ மாணவர்கள்!!

தற்போது பிளஸ் டூ செய்முறை தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதே போல மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கின்றன. தேர்வுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் மாணவர்கள் இரவு பகல் பாராது தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்வுக்கு மும்முரமாக படித்து வருகின்றனர். இரவு நேர மின்தடை, அதிகாலை மாயமாகும் மின்சாரத்தால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்வை சரிவர எழுத முடியாமல் அவர்களது மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை?


More Info: http://tamil.oneindia.in/news/2012/02/08/tamilnadu-tn-people-struggle-with-more-than-8-hours-aid0136.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக